நவீன தொழிநுட்ப மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி பெற்று கொடுக்க அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நடவடிக்கை.
பெருந்தோட்டக்கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சு நவீன தொழிநுட்பத்ததுடன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டி வருகின்ற விவசாயிகளுக்கு உலகவங்கியின் உதவி வழங்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கமைய. மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்த மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான திருமதிகலாமதிபத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார்.
வறுமையான மக்கள் வாழும் மாவட்டங்களுக்கு முன்னுரிமைஎன்ற அடிப்படையில் இந்ததிட்டம் அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை, மொனராகல மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடையபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுகாட்டி வருகின்ற விவசாயிகளுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரசாங்கத்தின் இந்த உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் விசேட செயலமர்வொன்று செவ்வாய்கிழமை (19) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்திருமதி.திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பெருந்தோட்டக்கைத் தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சினூடாக முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினூடாக நவீனதொழி நுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நிதி உதவிகளை ஐந்தாவது தடவையாக வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து மாகாண விவசாயிகளிடமிருந்து தற்பொழுது திட்டமுன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவீனதொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடுகாட்டிவருகின்ற விவசாயிகளுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரசாங்கத்தின் இந்த உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நடவடிக்கை எடுத்துள்ளார் .
இதற்கமைய இம்மாவட்டத்தில் நவீன தொழிநுட்பத்துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டிவருகின்ற விவசாயிகளுக்கும் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் தேவையான அறிவூட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் விசேடநிகழ்வொன்று திங்கட்கிழமை மாலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகமாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட விவசாயபணிப்பாளர் வை.பீ.இக்பால், மாவட்டகால்நடை அபிவிருத்தி வைத்தியர் திருமதி,உதயராணி குகேந்திரா, கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்எஸ்.சுதர்சன், மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களபணிப் பாளர்என்.தனன்ஜயன், மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் ருக்சான் குறுசான் மற்றும் அரசதிணைக்களங்களின் உயர்அதிகாரிகள் பங்கு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்
0 Comments:
Post a Comment