6 May 2020

மட்டக்களப்பில் கடந்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.

SHARE
மட்டக்களப்பில் கடந்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை கனிசமான அளவு குறைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த கலங்களைவிட கனிசமாகக் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 27 ஆந் திகதி தொடக்கம்; 2020 மே  01 ஆம் திகதி வரையும் 27 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி தொடக்கம்; 2020 மே  01 ஆம் திகதி வரையும் 27 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்;.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 14 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போன்று ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 04 பேர்  ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில்  04 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர்;, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 2 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒருவருமாக  இனங் காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வெல்லாவெளி, பட்டிப்பளை, கோரளைப்பற்று மத்தி, கிரான், வவுனதீவு, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை. 

மேலும் கடந்த சில வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தாh.; மொத்தமாக கடந்தவாரம் 27 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வழைச்சேனை பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(வ.சக்திவேல் 077 6279 436, 06.05.2020)     
       

SHARE

Author: verified_user

0 Comments: