13 May 2020

இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி – மட்டக்களப்பில் சம்பவம்.

SHARE
இளம் ஊடகவியலாளர் விபத்தில் பலி – மட்டக்களப்பில் சம்பவம்.
இளம் ஊடகவியாளர் ஒருவர் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில் புதன்கிழமை (13) பிற்பகல் இடம்பெற்ற போர விபத்தில் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

இன்ன காபர் வீதி, திருகோணமலையச் சேர்ந்த 21 வயதுடைய ரகுநாதன் மிதுன்சங்கர் (இளம் ஊடகவியலாளர்) வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். புதன்கிழமை தனது சக ஊடகவியலாளர், ஒருவர் உட்பட 3 நட்பர்களுடன் மொத்தம் 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் கல்லாற்றிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்னால் வீதியோரமாக தரிது நின்றுள்ளனர். இந்நிலையில் பின்னால் பொருட்களை ஏற்றிச் சென்ற உழவு இயற்திரம் குறித்த ரகுநாதன் மிதுன்சங்கர் (இளம் ஊடகவியலாளர்) நின்ற மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியுள்ளதனால் இவ்விபத்து சம்பதித்துள்ளதாக இதனை நேரில் கண்ட அவரது சக நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியை கைது செய்துள்ளனர். சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

ரகுநாதன் மிதுன்சங்கர் தீபம் ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 







SHARE

Author: verified_user

0 Comments: