10 May 2020

இலங்கை வந்த இந்திய புடவை வியாபாரிகள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை.

SHARE
(திலக்ஸ்) 

இலங்கை வந்த இந்திய புடவை வியாபாரிகள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு புடவை வியாபாரத்திற்காக வந்த வியாபாரிகள் பலர் மீண்டும் செல்ல முடியாமல் முடக்கப்பட்டுள்ளனர். கோரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முடக்கப்பட்ட போது விமான சேவைகளும் நிறுத்தப்பட்டமையினால் அவர்கள் சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

தாங்கள் அன்றாட உணவு தேவையினை பூர்த்தி செய்யமுடியாமலும், பல அடிப்படை தேவைகளன்றி தத்தளித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பழுகாமம், திக்கோடை கிராமங்களில் தனியார் வீடுகளில் தங்கியுள்ளனர்.  இவர்களுக்கான நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்கள். 

இலங்கை அரசின் உத்தியோகபூர் விசா பெற்று இலங்கைக்கு வந்து வீ
டு வீடாகச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் இந்த இடர்கால சூழ்நிலையில் பணத்தினை வசூலிக்க முடியவில்லை எனவும், அவர்களை இந்தியாவிற்கு செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தனர். 

இது தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் வினவிய போது, திங்கட்கிழமை (11) பின்னர் அவர்களின் தகவல்களை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும், நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும்” தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: