10 May 2020

மட்டக்களப்பில் அதிக வரட்சியினால் வற்றியுள்ள குளங்கள், பாரம்பரிய மீன்பிடியில் மக்கள், வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பு.

SHARE
மட்டக்களப்பில் அதிக வரட்சியினால் வற்றியுள்ள குளங்கள், பாரம்பரிய மீன்பிடியில் மக்கள், வெளிநாட்டுப் பறவைகள் படையெடுப்பு.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு உஷ்னத்துடன்கூடிய அதிகளவு வெய்யில் நிலமை காணப்பட்டு வருகின்றது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள கோவில்போரதீவுக்குளம், பெரியபோரீவு பெரியகுளம், பொறுகாமம் குளம், வெல்லாவெளிக்குளம், வட்டிக்குளம், தும்பங்கேணிக்குளம், பழுகாமம் குளம் போன்ற அனைத்து சிறிய குளங்களும், முற்றாக வற்றிப்போயுள்ளன.

இந்நிலையில் வற்றியுள்ள குளங்களில் பல வர்ண வெளிநாட்டுப் பறவைகள் இரை தேடி படையெடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில்  வற்றியுள்ள குளங்களில் ஆங்காங்கே காணப்படும், குளிகளில் தேங்கியுள்ள நீரில் கரப்பு, அத்தாங்கு, கொண்டு, வீச்சுவலை, போன்ற பாரம்பரிய மீன்பிடி உபகரஙண்களைப் பாவித்து, பாரம்பரிய முறைகளில் தமது உணவுத் தேவைக்காக மக்கள் மீன்களைப் பிடித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது

குளங்களில் நீர் முற்றாக வற்றியுள்ள இந்நிலையில் அதிக வரட்சியினால் மனிதர்கள் மாத்திரமின்றி கால்நடைளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 















SHARE

Author: verified_user

0 Comments: