13 May 2020

களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்.

SHARE
களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வடக்குப்  பக்கமாக அமைந்துள்ள கிணறு பொங்கி வழிந்த அற்புதம் புதன்கிழமை (13) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….

களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வடக்குப் பக்கதாக அமைந்துள்ள கிணறு இன்று புதன்கிழமை (13) நிரம்பி வழிந்துள்ளது. இதனை ஆலயத்திற்குச் சென்ற ஆலய பிரதமகுரு குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா ஆலய நிருவாகத்தினரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் ஆலயத்திற்கு விரைந்து கிணற்றைப் பார்வையிட்டுள்ளனர். பின்னர் அவ்விடத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்க இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் மக்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

எமது ஆலயத்தில் புதன்கிழமை (13) அதிசய அற்புதம் நிகழ்ந்துள்ளது. அந்த வகையில் எமது களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வடக்குப் பக்கத்திலிருக்கின்ற கிணற்றிலிருந்து நீர் வழிவதை அதிகாலை 5.30 மணியளவில் நான் கண்டேன். பின்னர் நான் ஆலய செயலாளரிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். பின்னர் மக்கள் இதனை அறிந்து வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். 

இதுமாத்திரமின்றி பல ஆண்டுகளாக இந்த களுவாஞ்சிகுடி புண்ணிய பூமியிலே எமது மாணிக்கப்பிள்ளையார் அருள்பாலித்துக் கொண்டு பல அற்புதங்கள நிகழ்ந்து வருகின்றது எமது கிராமத்திற்கு மாத்திரமின்றி அனைவருக்கும் தெரிந்த விடையமாகும். 

அதுபோல் தற்போது எமது ஆலயத்தின் கிணற்றிலிருந்து நீர் வழிகின்ற அற்புதமானது இறைவனுடைய அருள்தான் என நான் தெரிவிக்கின்றேன். இந்த அருள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என நான் மாணிக்கப்பிள்ளையாரிடம் வேண்டுகின்றேன் என ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார்.

புதன்கிழமை அதிகாலை எமது ஆலய பிராமகுரு ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ மு.அங்குசசர்மா எனக்கு தொலைபேசி மூலம் தெரிவிதார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிவதாகவும், இந்த அற்புதத்தை நேரில் வந்து பார்வையிடுமாறும் தெரிவித்தார். எமது ஆலயத்தில் அடிக்கடி நடைபெறும் அதிசயத்தில் இது ஒரு வித்தியாளமான அதிசயமாகும். இது தற்போது ஏற்பட்டிருக்கின்ற கெரோனோ நோயை இல்லாதொழிப்பதற்குக்கூட அமையலாம் எனவும் எனக்குப் புலனாகின்றது. என மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் செயலாளர் சத்தியமோகன் தெரிவித்தார்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடிப் பகுதி பொதுச் சுகாதார உத்தியோகஸ்த்தரும் குறித்த இடத்திற்கு விரைந்த நிலமையினைப் பார்வையிட்டு அவதானித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர், மற்றும், ஆய்வுப் பிரிவுக்கும் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

எது எவ்வாறு அமைந்தாலும் அதிகாலையிலிருந்த மக்கள் குறித்த ஆலயத்தைவழிபாடு செய்து கிணற்றை மக்கள் தூர நின்று பார்ரவையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






















SHARE

Author: verified_user

0 Comments: