மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கம் ஆகியவை இணைந்து சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (06) மண்முனைமேற்கு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை நெல்லூரில் நடைபெற்றது.
வருடம் முழுவதும் அன்றாடம் வீட்டுப்பாவனைக்கான மரக்கறிகளை உற்பத்தி செய்யும் நோக்குடன், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக விவசாய அமைச்சினால் 10 இலட்சம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாக இந்த சௌபாக்கியா வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மத்தி விவசாய வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் என்.ஜெகன்நாத், மட்டக்களப்பு மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, விவசாயப் போதனாசிரியர்கள் கே.லிங்கேஸ்வரன், ஏ.டபிள்யூ.சிபான் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது வருகைதந்த விவசாயிகளுக்கு விதைப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் தற்காலத்தில் வீட்டுத்தோட்டத்தின் அவசியம் பற்றியும் விவசாயப் போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
எமது பிரரதேசத்தில் உருவாக்கக்கூடிய உணவுப் பொருட்களை நாம் எமது பிரசேத்திலே பயிரிட வேண்டும் என்பதுடன் எமது மாவட்டம் எல்லாவகையான பயிர்களையும் உற்பத்தி செய்யக்குடிய தன்னிறைவான மாவட்டமாக மற்றமடைய வேண்டும் என இந்நிகழ்வில் கலந்துகொண்ட கமநல திணைக்கள மாவட்டப் பணிப்பாளர் என்.ஜெகன்நாத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment