19 May 2020

மட்டக்களப்பில் அரசாங்கத்தின் சௌபாக்கிளயா திட்டத்திற்கு இணங்க 30 ஆயிரம் வீட்டுத் தோட்டங்களுக்கான பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.

SHARE
மட்டக்களப்பில்  அரசாங்கத்தின் சௌபாக்கிளயா திட்டத்திற்கு இணங்க 30 ஆயிரம் வீட்டுத் தோட்டங்களுக்கான பயிர் கன்றுகள் வழங்கி வைப்பு.
நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படாதிருக்க முன்கூட்டியே அரசாங்கம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எண்ணக்கருவில் தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் கணபதிப் பிள்ளை பொன்னம்மா பௌண்டேசன் நிதிஉதவியுடன் வாழைச்சேனை தூய துளிர் அமைப்பு 30 ஆயிரம் வீட்டுத் தோட்ட பொதியினை முற்று முழுதும் இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்விசேட திட்டத்தில் மரக்கறி செய்கைக்கு ஆர்வம் காட்டும் குடும்பங்களுக்கு இலவசமாக பயிர் கன்றுகள் மற்றும் விதைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டசெயலகத்தின் அரச ஊடகப்பிரிவுத்தகவல் தெரிவிக்கின்றது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள குடும்பங்களுக்கு மேலதிகமாக சகல அரச ஊழியர்களையும் பயன்பெறச் செய்யும் நோக்கில் அரச ஊழியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். 
  
இதற்கமைய  செவ்வாய்கிழமை (19) மாவட்ட செயலக வளவில் சகல அரச உத்தியாகத்தர்களுக்குமான மரக்கன்றுகள் மற்றும் விதைகளை வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மரக்கண்டுகளையும் விதைப் பொதிகளையும் வழங்கி வைத்தார். இம்மரக்கறிப் பொதிகளில் கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகளும், வெண்டி, கீரை, பயற்றை மற்றம் அவரை போன்ற விதைகளும் உள்ளடங்கியிருந்தன.

இம்மரக்கன்று வழங்கும் நிகழ்வில் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மோகன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர். ஏ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புன்னியமூர்ததி, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட பணப்பாளர் திருமதி. அமிர்தாதேவி பாக்கியராஜா, தூய துளிர் அமைப்பின் ஆலோசகர் கே.கனேசநாதன், செயலாளர் வை.விஜயலக்ஸ்மணன், மாவட்ட தகவல் அதிகாரி வீ.ஜீவானந்தன் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.









SHARE

Author: verified_user

0 Comments: