16 May 2020

30 வருடங்களுக்கு மேலாக பாழடைந்து கிடக்கும் தபால் திணைக்கள வளாகம் சிரமதானம்.

SHARE
30 வருடங்களுக்கு மேலாக பாழடைந்து கிடக்கும் தபால் திணைக்கள வளாகம் சிரமதானம்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்துள்ள  தபால் காரியாலயம் தற்போது அத்திணைக்களத்திற்கு மீளக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்டடம் உடைந்து பாழடைந்த நிலையில் காணப்படுவதோடு, அவ்வளாகமம் பற்றைக்காடாகக் காணப்பட்டுள்ளது.

இதனைக் கவனத்திற் கொண்டு களுவாஞ்சிகுடி தபால் காரியாலய அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவ்வளாகத்தை டெங்கு நுளம்புகள் பரவாமலிருக்கும் வகையில் சனிக்கிழமை (16) சிரமதானம் செய்து சுத்தம் செய்துள்ளனர். 

இதனால் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தபால் திணைக்களத்தின் களுவாஞ்சிகுடி தபாற் காரியாலயத்திற்குகச் சொந்தமான பழைய கட்டடம் அமைந்துள்ள வழாகம் டெங்கு நுளம்புகள் பரவாமலிருக்கும் வகையில், துப்பரது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: