(அஸ்மி)
மௌலானாவின் முன்னெடுப்பினால் இன்று காலை 25 பேர் சொந்த இடங்களை வந்தடைந்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த இறுக்கமான ஊரடங்கின் காரணமாக கொழும்பின் பல பகுதிகளிலும் இரண்டு மாதங்களாக அடைபட்டு , அவஸ்தையுற்றிருந்த ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை ,ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி போன்ற பிரதேசங்களை சேர்ந்த 25 பேர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவின் முன்னெடுப்பினால் இன்று தத்தமது இருப்பிடங்களை சென்றடைந்தனர்.
இவர்கள் அனைவரும் நிர்க்கதியான நாள் தொடக்கம் இன்றுவரை மௌலானாவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். அவர்களுக்கான உணவு மற்றும் சுகாதார வசதிகளையும் இக்காலப் பகுதிக்குள் அவர் வழங்கியிருந்தார். குறித்த காலப்பகுதிக்குள் இவர்கள் அனைவரும் தத்தமது இருப்பிடங்களை விட்டும் வெளியில் எங்கும் போகாதவண்ணம் கண்காணிக்கப்பட்டவர்களாகும். மேலும் உரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் முழுமையான உடற்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிகளையும் பெற்றே அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த 25 பேரையும் அலிஸாஹிர் மௌலானாவின் சொந்த நிதியிலான வாகன ஏற்பாட்டில் ஒவ்வொருவரினதும் இருப்பிடங்களுக்கு சென்று சேகரிக்கப்பட்டே அவர்களுக்கான சகல வசதிகளும் செய்துகொடுத்தே அனுப்பிவைக்கப்பட்டனர்..
இவர்கள் அனைவரையும் அழைத்துவந்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினரின் மீள் உறுதிப்படுத்தற் பரிசோதனைகளின் பின்னர் உரிய அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் அவரவர் இடங்களில் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள்.
இப்படி நிர்க்கதியான நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த பலருக்கும் சகலவிதமான உதவிகளையும் வழங்கி அவரவர் சொந்த இடங்களில் சேர்ப்பித்ததால் குறித்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றனர்.
இவ்வாறான மகத்தான சேவைகளை செய்யும் அலிஸாஹிர் மௌலானாவுக்கு மக்கள் தமது உளத்தூய்மையான நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment