(ஜே.எப்.காமிலா பேகம்)
MSC Magnifica என்ற கப்பலில் இன்று இலங்கை வந்தடையும் , இலங்கையர் ஒருவருக்கு, இலங்கை நாட்டுக்குள் உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது. அநுர பண்டார ஹேரத் என்ற , இலங்கையர் ஒருவருக்கே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இக்கப்பலில் தொழில் புரிபவர். கடந்த மாதம் உலகின் சில நாடுகளுக்கு சுற்றுலாவை தொடங்கிய இக்கப்பலானது , கொரோனா பீதி காரணமாக பல நாடுகளில் தரித்து நிற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இலங்கையில் 3 மணி நேரம் நிறுத்தப்படும் சந்தர்ப்பம் கிடைத்ததால், இக்கப்பலில் பயணித்த குறித்த இலங்கையர் ஏற்கனவே ஜனாதிபதியிடம் ,அனுமதி கோரி இருந்தார். குறித்த கப்பல் இலங்கை வந்த பின் , இத்தாலியை நோக்கி செல்வதால், தனக்கு பல்வேறு பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதாக , அவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கப்பலில் இது வரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. சுமார் 2700 பேர்களுடனேயே இக்கப்பல் தொடர்ந்தும் பயணித்துள்ளது. இது இத்தாலி நாட்டு கப்பல் ஆகும்.
0 Comments:
Post a Comment