30 Apr 2020

மட்டக்களப்பில் உணவுப்பஞ்சம்தவிர்க்க நெல்செய்கை ஆரம்பம் அரசின் மானிய உரவிநியோகம்துரிதமாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பில் உணவுப்பஞ்சம்தவிர்க்க நெல்செய்கை ஆரம்பம் அரசின் மானிய உரவிநியோகம்துரிதமாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை.
அரசாங்கத்தின் முன்கூட்டிய ஏற்பாட்டில்  நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உணவுப்பஞ்சம் ஏற்படுவதனை தடுக்க 2020 ம் வருட சிறுபோக வேளாண்மைச்செய்கைக்கான வேலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் துரிதமாக எவ்வித தடங்கலுமின்றி நடைபெற்று வருகின்றன. 

இதற்கமைய இம்மாவட்டத்தில் 2020 ம் வருட சிறுபோக வேளாண்மைச்செய்கைக்கு தேவையான மானிய உரவிநியோகம் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலில் தேசிய உரச்செயலகத்தின்மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.ஐ.சிராஜுன்நெறிப்படுத்துதலில் கமநலசேவைகள் திணைக்களத்தின் மாவட்டஉதவி ஆணையாளர் கே.ஜெகன்னாத்தின் ஒத்துழைப்புடன் இம்மாவட்டத்திலுள்ள 1 6 கமநலகேந்திரங்கலூடாகசீரான விநியோகம்இடம்பெற்று வருகின்றன.

இம்மாவட்டத்தில்நெல்வயல்களுக்கு 7650.25மெட்ரிக் தொன் மானிய உரம் அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாகவும்    4787.62 மெட்ரிக் தொன்மானிய  உரம் இங்கு கொள்வனவு செய்யப்பட்டு  இதன்படி கடந்த திங்கள்கிழமை வரையில் 11995விவசாயிகளுக்கு   36770ஏக்கர் நெல்வயல்களுக்கு3977 மெட்ரிக் தொன் மானியஉரம்  விநியோகம் செய்திருப்பதாக தேசிய உரச் செயலகத்தின்மட்டக்களப்பு மாவட்டஅலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே இந்த உர மானியத்திட்டத்தில்வந்தாறுமூலை கமநல கேந்திர பிரிவில் 3500 விவசாயிகளுக்கு  6797ஏக்கர் நெல்வயல்களுக்கு உரமானியம் வழங்கப் பட்டுள்ளதாகவும் வந்தாறுமூலை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பதுர்தீன் தெரிவித்தார் .






SHARE

Author: verified_user

0 Comments: