வாழ்வாதாரத்தை இழந்துள்ள மட்டக்களப்பு தொழிலாளருக்கு உலருணவுகளை அன்பளிப்புச்செய்ய தொடர்ந்தும் தொண்டார்வ அமைப்புக்கள் முன்வந்துள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளின் லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான உலருணவு பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது .
சுமார் 300 கும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க அரிசி சீனி இமாவு பருப்பு அடங்கலான உலருணவு பொதிகளை லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளை பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (07 மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் ஒப்படைத்தனர் .
இந்த அன்பளிப்பு உலருணவுப் பொதிகள் மண்முனை பற்று ஆரையம்பதி கோறளைப்பற்று தெற்கு கிரான் ஆகிய இரு பிரதேச செயலகப்பிரிவுகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நாளாந்த கூலிவேலை தொழிலாளருக்கு வழங் குமாறு இரு பிரிவின் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர்.கலாமதி பத்மராஜா ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட செயலக அரச ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.
இந்த அன்பளிப்பு உலருணவுப் பொதிகள்கையளிக்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் உதவி மாவடட செயலாளர் ஏ.நவேஸ்வரன் லண்டனில் செயல்படும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் கணக்காளர் பெ.முத்துலிங்கம் உபதலைவர் ஓய்வுநிலை வலயக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உபசெயலாளர் கே.சசிதரன் இகணக்காய்வாளர் என்.ஜெபராஜா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
0 Comments:
Post a Comment