மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு உள்நுளையும் வாகனங்களும் பிரதேசத்திலிருந்து வௌிச்செல்லும் வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையினால் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு செயற்திட்டமாக மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும் வலையிறவு - வவுணதீவு வீதியால் செல்லும் வாகனங்கள் மற்றும் வவுணதீவு வீதியால் செல்லும் சகல வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.
வவுணதீவு பொலிஸார் மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சண்முகராஜா தலைமையில் இந்த நடவடிக்கை கடந்த புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்றுவருகின்றது.
இதன்போது மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு உள்நுளையும் வாகனங்களும் பிரதேசத்திலிருந்து வௌிச்செல்லும் வாகனங்களும் மண்முனை மேற்கு பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களில் கொரோனா கிருமி தொற்றை தடுக்கும் வகையில் கிருமி தொற்றுநீக்கி விசிறி தொற்றுநீக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment