களுவாஞ்சிகுடியில் கொரோனா விழிப்புணர்வு வீதி நாடகம்.
உலகையே உலுக்கி வரும் கொவிட் - 19 எனப்படும், கொனோரா எனும் புதிய வகை வைரசின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் பல்வேறுபட்ட வழிமுறைகளையும், பொறிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல் மக்களும் தமது ஒத்துளைப்புக்களை வழங்கிவரும் இந்நிலையில் சிலர் பொறுப்பற்ற வித்திலும் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரானா நோயிலிருந்து தம்மைத் தாதாகவே பாதுகாத்துக் கொள்ளும் நெறிமுறை எனும் தொணிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள கீர்தி குயிக் வேர்க் சொப் அமைப்பினர் புதன்கிழமை (22) வீதி நாடகம் ஒன்றை களுவாஞ்சிகுடி மணல் வீதியில் நடாத்தினர்.
கொரோனா வைரசின் உருவம் தாங்கிய வேடம் தரித்து அது மக்கள் குழுமியிருக்கும் இடங்களைத் தாக்குவது போன்றும், பின்னர் மக்கள் தங்களைத் தாங்களாகவே முறையாக கை கழுவி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்து, சுத்தமதாக இருக்கும் போதும், வைத்தியவர்கள் உரிய மருத்துவ ஆலோசனையை வழகும் போதும், கொரோனா மக்களைத் தாக்க முடியாமல், பின்வாங்கிச் செல்வது போன்றும், பின்னர் சேவையாற்றிய வைத்தியர்களுக்கு மக்கள் நன்றி கூறுவது போன்றும், வைத்தியர் கொரோனாவை எரிப்பது போன்றும் இதன் காட்சிகள் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment