காத்தான்குடி ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றமை தொடர்பில், பள்ளிவாயலின் நிர்வாகத்தின் முறைப்பாடு செய்துள்ளனர் என்று, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி தெற்கு எல்லையிலுள்ள, ஸலாமத் ஜும்ஆப்பள்ளிவாயலின் கட்டட நிதிக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலே, உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
அத்துடன் பள்ளிவாயலுக்குள் இருந்த சிறிய அலுமாரியும் உடைக்கப்;பட்டுள்ளது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment