(ஏ.எச்.ஏ.குஸைன்)
காத்தான்குடி நகர சபைப் பிரிவில் யாசகம் கேட்டு திரிவதற்கு மறு அறிவித்தல் வரை தடை.
ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் மறு அறிவித்தல்வரை யாசகம் உட்பட சகல விதமான தர்மக் கொடைகளையும் வீடு வீடாக கடை கடையாகச் சென்று பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர சபை நிருவாகம் அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் இந்த அறிவித்தலைக் கடைப்பிடிக்குமாறும் அந்த அறிவித்தலில் காத்தான்குடி நகர வாசிகளை நகர சபை நிருவாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த அறிவித்தலின்படி இஸ்லாமிய வழக்கில் ஸகாத், பித்ரா எனப்படும் தர்மக் கொடைகளை வீடுகள், கடைவீதிகளில் சென்று கேட்டுத் திரிவது உள்ளுர் வெளியூர் பொது மக்கள் என அனைவருக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
நகர சபை விடுத்துள்ள அந்த அவசர அறிவித்தலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அரசின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது எம் அனைவர்மீதும் உள்ள தலையாய கடமையாகும்.
இது காத்தான்குடி நகரசபையின் ‘கொரோனா- வருமுன் காப்போம்’ எனும் விசேட வேலைத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பாகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment