17 Apr 2020

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க நிர்வாகத்தினை சவாலுக்கு உட்படுத்திவருகின்ற போலி முகநூல் மூலமாக விமர்சனங்களை செய்துவந்த ஆசாமிகள் கைது

SHARE

மட்டக்களப்பு மாவட்ட அரசாங் நிர்வாகத்தினை சவாலுக்கு உட்படுத்திவருகின்ற போலி முகநூல் மூலமாக விமர்சனங்களை செய்துவந்த ஆசாமிகள் எட்டுப் பேர்  வியாழக்கிழமை (16) மாலை காத்தான்குடி பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் போலி முகநூல்கணக்கில் செயற்பட்டு வந்தநபர்களினால் தொடர்ச்சியாக அரசாங்க சேவையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் தெடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதும் அவர்கள் இன்றைய கொரோனா தொற்று ஏற்பபட்டுள்ள அவசரகால நிலமையில் அற்ப்பணிப்புடன் செயல்ப்பட்டுவருகின்ற நிலையில் விமர்சனத்திற்கும் பழிச்சொற்களுக்கும் போலி முகநூல் காறரினால் வசைபாடப்பட்டு வருவது ஒரு அருவருக்கத்தக்க செயலாகும் இதனை அரசு தடுக்கும் முகமாக இவ்வாறான கைதுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இவ்வாறான கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மக்களுக்கு அற்பணிப்பான சேவையினை வழங்கிவருகின்ற கிராமசேவகர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதும் தாக்குவதற்கு செல்வதுமாக பலதரப்பட்ட செயல்களில் ஈடுபட்டுவருபவர்கள் இத்தகைய போலி முகநூல்கணக்கூடாக தரக்குறைவாக எழுதிவருகின்ற இப்படியான  கிழ்த்தரமான எழுத்தாளர்களை தொடர்ந்தும் கைதுசெய்வதற்கான நடைமுறையினை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றது.

இவ்வாறு மற்றவர்களை முகநூல் வாயிலாக விமர்சனம் செய்கின்றவர்கள் ஒருவிதமான மனநோயாளிகளாகவே மனநல வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர் அந்தவகையில் இவர்களுக்கான தன்டனையை அதிகபட்சமாக வழங்கப்படும் போதுதான் இவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பிருப்பதாக பொதமக்கள் பொலிசாருக்கு கூறியுள்ளனர்.;

கடந்த சில நாட்களாக காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் செங்கலடி பிரதேச செயலகத்திலும் உள்ள அதிகாரிகளை மன உழசை;சலுக்குள்ளாக்கும் வகையில் இந்த நாசகார கும்பல் செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: