துறைநீலாவணையில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வும், நிவாரணப் பொதிகளும் வழங்கிவைப்பு.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதரண சூழலைக் கருத்தில் கொண்டு கொரோனோ தெற்றிலிருந்து எவ்வாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்பணர்வு நிகழ்வும், இதனால் தொழிலில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு துறைநீலாவணையில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்றது.
இதன்போது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினரால் கொரோனா தொடர்பான விழிப்புணர்வூட்டப்பட்டு, அது தொடர்பான துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் தற்போதைய காலகட்டத்தினுள் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் நாளாந்தம் கூலித் தொழில் செய்பவர்கள் வருமானமிழந்துள்ளதனால் அவர்களுள் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு களுவாஞ்சிக்குடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பினால் 100 குடும்பங்களுக்கு, கோதுமைமா, அரிசி, சீனி, உள்ளிட்ட நிவாரண பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிதி உதவியை அவுஸ்ரோலியாவிலுள்ள தமிழ் சமூகம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிராமசேவை உத்தியோகத்தர் கே.சுரேஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்பினால் தலைவர் எஸ். ஜேசு சகாயம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் த.வசந்தராஜா, செயலாளர் எஸ்.மதிசுதன், பொருளாளர் வ.சக்திவேல், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment