27 Apr 2020

நெல் விதைத்து இதுவரையில் தண்ணீர் வழங்கப்படவில்லை விவசாயிகள் கவலை.

SHARE
நெல் விதைத்து இதுவரையில் தண்ணீர் வழங்கப்படவில்லை விவசாயிகள் கவலை.
மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பிற்குட்பட்ட வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட நாதனைவெளிக் கண்ட விவசாயிகள் தாம் சிறுபோக நெல் விதைத்தும், அதற்குரிய நீர்ப்பாசனம் இதுவரையில் கிடைக்காமையினால் தாம் விதைத் நெற்பயிர்கள் வெய்யிலில் கருகிக் கொண்டு செல்வதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது…

போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்டதும், வெல்லாவெளி கமநல பிரதேசத்திற்குடப்பட்டதுமான நாதனைவெளிக்கண்டத்தில் 300 ஏக்கரும், கரையாக்கண்கண்டிக் கண்டத்தில் 335 ஏக்கரும், ஓட்டடிமாரி கண்டத்தில் 350 ஏக்கரும், சின்னவர் கண்ணடத்தில் 250 ஏக்கரமாக மொத்தம். 1235 ஏக்கர் நெற்பயிர்கள் உரிய நீர்ப்பாசனமின்றி கருகி வருவதாக அப்பகுதி விவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி விவசாயிகள் திங்கட்கிழமை (27) அவர்களது நீரின்றிக் கருகிப்போயுள்ள வயலில் மண்வெட்டிகளுடன் இறங்கி தமது ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.

குறித்த விவசாயிகளின் நெயற்கண்டங்களுக்கு நீர்ப்பாச வசதிகளை செய்து கொடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக நவகிரிப் பரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: