ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் இழந்துள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு நிவாரணம்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்குச் சட்டத்தின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இதன் காரணமாக கூலித் தொழிலாளர்கள் தொடக்கம், ஏனைய சுய தொழில் செய்பவர்களும், இதன்போது எதுவித வருமானமுமின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர்.
இவ்வாறானவர்களுக்கு, பல பொது அமைப்புக்களும், தனி நபர்களும், தனவந்தர்களும், மக்கள் பிரதிநிதிகளும், தங்களாலான நிவாரணப் பொதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மவாட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி, மற்றும் எருவில் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் தமது வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். அவர்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (22) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள் தமது சொந்த நிதியிலிருந்து இதன்போது 80 முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இதன்போது வழங்கி வைத்தார்.
0 Comments:
Post a Comment