அரசாங்க அலுவலகங்கள் கடந்த திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் வழமைக்குத்திரும்பியுள்ளது மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கப்பட்டு சுழற்சிமுறையில் உத்தியோத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கும் படியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயாலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமை கடமைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.சுகாதார பகுதியினரின் அறிவுறுத்தல் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது நுழைவாயிலில் கைகழுவும் நடைமுறையினை பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கும் படி கண்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதனை தவிரவும் முகக்கவசம் கண்டிப்பாக அணிவதும் கையுறைகளை அனிவது தொற்று நீக்கிகளை காலையில் அலுவலகங்களுக்கு உத்தியோகத்தர்கள் வருவதற்கு முன்னர் விசிறுவதும் பின்னர் உத்தியோகத்தர்கள் அலுவலகங்களைவிட்டு வெளியேறியதும் விசிறுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்களை அவசியம் ஏற்படும்பட்சம் அழைப்பதாகவும் மற்றும்படி அவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தவிர உத்தியோகத்தர்கள் அலுவலகத்தினை அன்மித்தவர்களுக்கு பகுதி தலைவர்களின் தேவையைப்பொறுத்து ஆள்அணியினரை தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களின் சேவையினை பெறுவதற்காக குறைந்தளவினர்கள் மாத்திரமே வருகைதருவது அவதானிக்கப்படுகின்றது. பிரதேச செயலகங்களில் மக்களின் நடமட்டம் வெகுவாக குறைந்து கானப்பட்டது சில அத்தியாவசிய தேவைகள் நிமிர்த்தம் மக்கள் வருகை தருகின்றனர்.
0 Comments:
Post a Comment