24 Mar 2020

கெரோனா தொற்று தொர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் பல செயற்பாடுகள் முன்னெடுப்பு.

SHARE
(ரூபன்) 

கெரோனா தொற்று தொர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் பல செயற்பாடுகள் முன்னெடுப்பு.
மட்டக்களக்கு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கொரோனா தொற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் முகமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.

அந்த வகையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பொதுநூலகங்கள், பொதுச் சந்தைகள் எனபவை மறு அறிவித்தல்  வரை தற்காலிகமாக மூடுதல். 

மறு அறவித்தல்  வரை சிகை   அலங்கார, அழகுக் கலை நிலையங்களை மூடுதல்.

மக்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கல்.

ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் கை கழுவுவதற்கான ஏற்பாடு செய்யப்படல்.

அத்துடன் தொடர்ச்சியாக திண்மக் கழிவகற்றலை மேற்கொள்ளல். 

தொற்று நீக்கும் நடவடிக்கையை பொதுமக்கள் கூடும் இடங்களாகிய பேரூந்து  தரிப்பு நிலையங்கள், பொதுச் சந்தைகள், பேரூந்துகள், குருக்கள்மடம், குருமன்வெளி இறங்குதுறை, வைத்தியசாலைகள், வழிபாட்டுத்த தலங்கள், பிரதேச செயலகம், சமூர்த்தி வங்கிகள், போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரப்படுவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: