மட்டக்களப்பு கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் செவ்வாய்கிழமை (03) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். மட்டக்களப்பு கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்கள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை இன்று சம்பிரதாயபூர்வ சமய வழிபாட்டு நிகழ்வுகளின் பின்னர் தமது கடமையேற்றுக்கொண்டார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்புக் கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மட்டக்களப்பு கல்வி வலய உத்தியோகத்தர்கள்,அதிபர்கள்,மட் டக்களப்பு
கல்வித்துறைசார் நலன் விரும்பிகள் பலரும் கலந்துகொண்டு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
மட்டக்களப்புக் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளரான இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் ஐ உத்தியோகத்தர் திரு.வே.மயில்வாகனம் அவர்கள் 02.03.2020 திங்கட்கிழமை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் ஐ உத்தியோகத்தரான திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்கள் புதிய வலயக்கல்விப்
பணிப்பாளராக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால்
நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமதி. சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்கள் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் இலங்கையில் ஒரேயொரு தமிழ்ப் பெண்ணாக தெரிவுசெய்யப்பட்டார். இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் 9 வருடங்கள், உதவிக் கல்விப் பணிப்பாளராக 2 வருடங்கள், அதிபராக 5 வருடங்கள், நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக 8 வருடங்கள் என மொத்தம் 24 வருடகால கல்விச்சேவை அனுபவத்தைக் கொண்ட சிரே~;ட உத்தியோகத்தர் ஆவார்.
மேலும்,இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளவாளராகவும் கிழக்கு மாகாண ஆசிரியர்கள், மாணவர்களுக்குச் கல்விச்சேவையினை வழங்கிக்கொண்டிருக்கும் இவர் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஆவார் , இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி திப்புளோமா கற்கை நெறியில் அதிவிசேட சித்தியையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப்பட்டத்தையும், பிரான்ஸ் சிற்றி யூனிவர்சிட்டியில் கல்வித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ள இவர் மட்டக்களப்பு வாழைச்சேனை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது. திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மட்டக்களப்பு இந்து மகளீர் மன்றம்,சுவாமி விபுலானந்தர் நினைவுப் பணிமன்றம், மட்டக்களப்பு சர்வோதயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பாட்டு உறுப்பினராகவும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தின் ஆலோசகராகவும்,கல்வி, கலை கலாச்சார, பண்பாடு சார்ந்த சமூகப் பணியினை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஆற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment