5 Mar 2020

பாராளுமன்ற கணக்குக் குழவின் தேசிய நிதி நிருவாகப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மூன்றாம் இடம்.

SHARE
பாராளுமன்ற கணக்குக் குழவின் தேசிய நிதி நிருவாகப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மூன்றாம் இடம்.
இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் அடிப்படையில் அமைகின்ற அமைச்சுக்கள் அரச தினைக்களங்கள், மாவட்டச் செயலகங்களுக்கிடையிலான பாராளுமன்ற கணக்குக் குழவினால் நடாத்தப்படுகின்ற நிதி நிருவாக நடவடிக்கைகளின் முன்னேற்ற முன்னடைவுகளை கண்காணிக்கும் போட்டியானது 2018 ஆம் நிதி ஆண்டுக்கான போட்டியில் அகில இலங்கை ரீதியிலான மாவட்ட செயலகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. 

மூன்றாம் இடமானது 2018 நிதியாண்டிற்கான பாராளுமன்ற கணக்குக் குழுவுக்கு உரிய கால நேரத்திற்கு நிருவாகக் கணக்கு அறிக்கைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதம கண்காளரான க.ஜெகதீசன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இயங்கிய கணக்காளர் கிளை சிறப்பாக செயற்பட்டு இத்தகைய அடைவைப் பெற்றிருப்பது மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களையும் அதேபோன்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் சார்ந்ததாகும். 

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து மாவட்டச் செயலகத்தின் நிதி நிருவாக செயல்பாட்டினை முன்னெடுத்து வந்திருந்த முன்னாள் அரசங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மா.உதயகுமார் அவர்களுக்கும் இந்தப் போட்டியில் பங்கெடுத்து வெற்றிகொள்வதற்கு அவரது பங்களிப்பும் மிகுந்த காத்திரமான பங்களிப்பாகக் கருதப்படுகின்றது.

பாராளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்தப்பட்ட இப்போட்டிக்கான விருதுகள் கடந்த 28 ஆம் திகதியன்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார்.

பாராளுமன்ற கணக்குக் குழுவினால் நடாத்திய இப்போட்டியில் முதலாம் இடத்தினை யாழ் மாவட்ட செயலகமும் இரண்டாம் இடத்தினை குருநாகல் மாவட்ட செயலகமும் மூன்றாம் இடத்தினை கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: