கல்வி அபிவிருத்திச் சங்க பரிசளிப்பு விழா.
கிரான்குளம் கல்வி அபிவிருத்திச் சங்க பரிசளிப்பு விழா நிகழ்வுகள் கிரான்குளம் சீ மூன் கார்டன் மண்டபத்தில் சனிக்கிழமை (07.03.2020) நடைபெற்றது.
சங்கத் தலைவர் சி. புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச சரஸ்வதி வித்தியாலயம், விநாயகர் வித்தியாலயம், தர்மபுரம் தர்மரெட்ணம் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இருந்தும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும், சாதாரண தரத்தில் சித்தி பெற்று உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கும் கிரான்குளம் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கும் கௌரவிப்பும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பின்தங்கிய கிராமத்து மாணவர்களை கல்வியில் ஊக்குவிப்பதற்காக இத்தகைய விழாக்கள் தமது கல்வி அபிவிருத்திச் சபையால் நடத்தப்படுவதாக அதன் செயற்பாட்டாளர்கள் நிகழ்வின்போது தெரிவித்தனர்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம், மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் க. ஹரிஹரராஜ், மண்முனைப்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆர்.ஜே. பிரபாகரன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment