கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு.
வியாழக்கிழமை 05.03.2020 மீட்கப்பட்ட அந்தச் சடலம் கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை தேவி (வயது 35) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேதக் கூறாய்வுக்காக சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்திருக்கும் அதேவேளை பொலிஸார் மேலதிக புலனாய்வு விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment