ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நகரங்களை அழகுபடுத்தும் சுவர் ஓவியங்கள் மட்டக்களப்பில் திறந்து வைப்பு.ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நகரங்களை அழகுபடுத்தும் சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் தற்போது சுவர் ஓவியம் வரையும் திட்டம் நடைபெற்று வருகின்றது.
இதற்கிணங்க மட்டக்களப்பு புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலில் இலங்கையின் அபிவிருத்தி புராதன நிகழ்வுகளை சித்தரிக்கின்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுற்றுமதில் ஓவியங்களை இன்று (05) வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை; பொறியியலாளர் என். சசிநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் கே. சிவநாதன் பிரதம விருந்தினராக் கலந்து கொண்டு சுவரோவியங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திருமதி கே. வன்னியசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் விடுதி மதில்கள், வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment