24 Mar 2020

தடுப்பு முகாங்களில் இருந்தவர்கள் குடும்பங்களுடன் இணைப்பு.

SHARE

(ஆனந்தன்) 

தடுப்பு முகாங்களில் இருந்தவர்கள் குடும்பங்களுடன் இணைப்பு.
கொரோனா தடுப்பு முகாங்களான புனானை மற்றும் கந்தகாடு ஆகிய முகாம்களில் கடந்த 14 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டவர்கள் எவ்விதமான நோய்த்தொற்றும் இல்லாத நிலை தங்களின் குடுப்பங்களுடன் இனைக்கும் பணி செவ்வாய்கிழமை (24) இரானுவத்தினரின் பேரூந்து மூலமாக புனானை முகாமில் இருந்து மத்தறை பகுதிக்கு இரண்டு பேரூந்துகள் மூலமாக 80 பேரும் கொழும்புக்கு இரண்டு பஸ்கள் மூலமாக 125 பேயரும் கண்டிக்கு ஒரு பஸ் மூலமாக 33 பேரும் செவ்வாய்கிழமை (24) 9.50 மணியளவில் பொலிஸ் பாதுகாப்புடன் இரானுவத்தினர் அழைத்து சென்றனர்.

கந்தக்காடு பகுதியில் இருந்து 108 பேயர்கள் இரானுவத்தினரினால் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

இன்றைய நிலமையினை பார்க்கும் போது இலங்கையின் நிலவரம் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாக அவதானிக்கமுடிகின்றது உண்மையில் வெளிநாடுகளில் இருந்து வருகைதருகின்றவர்கள் தங்களை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொண்டு வைத்திய ஆலோசனைப்படி நடந்து கொள்வார்கலானால் நாட்டில் எவ்வாறான பயங்கர பாதிப்புக்களையும் நாம் எதிர்நோக்க வேண்டியதில்லை.  









SHARE

Author: verified_user

0 Comments: