14 Mar 2020

மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்க புதிய நடைமுறை அமுலாகும்.

SHARE
மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்க புதிய நடைமுறை அமுலாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத மண் அகழ்வினை தடுக்கும் பொருட்டு புதிய பொறிமுறையொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திட்டமிட்டுள்ளார். இதற்கான தீர்மானங்கள் அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட கனியவள முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய சட்டரீதியான மணல் அகழ்வு அனுமதி வழங்குதல் தொடர்பில் சரியான பொறிமுறையொன்றை உருவாக்கி வெளிப்படைத் தன்மையான சீர் செய்யப்பட்ட மணல் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும், தற்பொழுது புதிய நடைமுறையினைக் கொண்டு வருவதாகவும் சட்ட விரோதமான மண் அகழ்வில் ஈடுபடுவோர்களை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினர் மற்றும் பொலிசாரின் பூரண ஒத்துளைப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இதற்கமைய அரசாங்க அதிபரினால் இக் கூட்டத்தில் பின்வரும் விடையங்கள் முன்மொழியப் பட்டன. மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான ஓர் புதிய பொறிமுறையினை உருவாக்குதல், மணல் அனுமதிப்பத்திரத்தில் அகழப்படும் மணலின் அளவு அகழப்படும் நாட்கள் என்பவற்றை வரையறை செய்தல், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான பொறிமுறை ஒன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தல், தற்போது நடைமுறையிலுள்ள மணல் அனுமதிப் பத்திரங்களை இடை நிறுத்துதல் அல்லது தடை செய்தல் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மணல் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும் போது ஏற்படும் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்க அதிபரினால் வனவளத் திணைக்களத்தின் எல்லைகளை குறிப்பிடும் ஆவணங்களின் பிரதிகள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் எம்மூடாக அனுப்பப்படும் மணல் அனுமதிப் பத்திர விண்ணப்பங்கள் குறிப்பிடப்படும் இடங்கள் குறித்த சரியான தீர்மானத்தினை எம்மால் அவதானிக்கப்பட்டு எல்லைகள் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்கலாமென அரசாங்க அதிபரினால் அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேலும் வனவளத் திணைக்களம் தங்களிடமுள்ள விண்ணப்பங்களை அரசாங்க அதிபருக்கு அனுப்புவதாக கூறப்பட்டது.

இம்மணல் அகழ்வு அனுமதிப் பத்திரம் வழகுவது தொடர்பில் எமது சிபாரிசானது அவசியமில்லை எனவும், எம்மால் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்படு, சந்தனமடு ஆற்றுப்படுக்கை, வீரகட்டு ஆற்றுப்படுக்கை, மையிலவட்டவான் ஆகிய மூன்று இடங்களில் மாத்திரம் மணல் அகழ்வினை மேற்கொள்ளலாம் என்பதுடன் குறித்த இடங்களுக்கு மாத்திரம் எமது உத்தியோகத்தர்கள் இடையிடையே கண்காணிப்பினை மேற்கொள்வர் எனவும் மத்திய நீர்ப்பாசன பணிப்பளர் எஸ்.எம்.பி.எம். அஸார் குறிப்பிட்டார்.

மேலும் இக்கூட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதும், அகழ்வு சம்மந்தமாக கண்காணிப்பது தொடர்பில் ஓர் குழுவினை உருவாக்குவதாகவும் அக்குழு பிரதேச செயலாளர்கள், கிராமசேவையாளர், முப்படை அதிகாரிகள், கிராம அபிவிருதர்திச் சங்கங்கள், விவசாய அமைப்புகள், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதுடன் மேற்படி குழுவினைக் கொண்டு சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் பிரதேசத்தை கண்காணித்தல் தொர்பில் அவ்வப் பிரதேச செயலாளர்களே முழுப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரசாங்க அதிபரால் குறிப்பிடப்பட்டது.

பிரதேச செயலகங்கள், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் அலுவலகம் சம்பத்தப்பட்ட திணைக்களங்கள் போன்ற இடங்களில் மணல், கிறவலானது யாருக்கு, எப்பிரதேசம், எத்தனை கியூப்ஸ் அனுமதிக்கப்பட்டது போன்ற விபரங்கள் விளம்பரப் பலகையில் இடம்பெற வேண்டும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மணல் அகழ்விற்காக அனுமதி வழங்க சிபாரிசு செய்யப்படும் இடங்கள் பொருத்தமானவையா என்பது தொடர்பில் கண்டறிவதற்கு புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவரும் கலந்துகொள்ள வேண்டுமென புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர்.எம். பாரிஸ் தெரிவித்தார். அத்துடன் அவ்வுத்தியோகத்தர் எவ்வளவு மணல், கிறவல் அகழ்வு செய்யலாம் என்பதனை குழுவிற்கு சிபாரிசு செய்வார் எனவும் தெரிவித்தார். மணல், கிறவல் அகழ்வு செய்துகொண்டு பாரிய கனரக வாகனங்கள் செய்வதனால் வீதிகள் சேதமடைவதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான புதிய நடைமுறை.

1. விண்ணப்பதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் மணல் அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பங்கள் பிரதேச செயலாளர்கள் ஊடாக மணல் அகழ்வு சார்ந்த திணைக்களங்களின் சிபாரிசினைப் பெற்று மாவட்டச் செயலாளருக்கு துரித தகவல் தொடர்பாடல் முறையின் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
2. அவை மாவட்ட செயலகத்தினூடாக பரசீலிக்கப்பட்டு புவிச்சரிதசியல் அளவை சுரங்கங்கள் பணியகத்திற்கு விரைவாக அனுப்பப்படும்.
3. புவிச்சரிதசியல் அளவை சுரங்கங்கள் பணியகத்தினால் விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன், வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான விபரங்கள் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
4. இதனைத் தொர்ந்து அனைத்து விரங்களும் மாவட்ட செயலகத்தினூடாக மணல் அகழ்வு சார்ந்த அனைத்து திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு துரிதமாக அனுப்பி வைக்கப்படும்.
5. இச்செயற்பாடுகள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மூன்று தினங்களுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
6. வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பாக அகழப்படும் மணல் அல்லது கிறவல் யாருக்கு, எப்பிரதேசத்தில், எத்தனை கியூப்ஸ் அனுமதிக்கப்பட்டது போன்ற விபரங்கள் உரிய பிரதேச செயலக விளம்பர பலகையில் வெளிப்படைதன்மையக காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மணல் அகழ்விற்காக அனுமதி வழங்கப்படும்போது கீழ்வரும் விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் மணல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். மணல் அகழ்வு செய்யும் பிரதேசத்திலுள்ள வறிய மக்கள், தொழிலின்றி இருப்பவர்கள், அருகிலுள்ள பிரதேசத்தவர்கள், மட்டக்களாப்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

புதிதாக வழங்கப்படும் ஒவ்வெரு அனுமதிப்பத்திரத்திற்கும் ஒரு மாத காலத்திற்கு 35கியூப்ஸ் மாத்திரம் வழங்குவதாகவும் எதிர்வரும் காலங்களில் குறித்த விண்ணப்பத்தாரிகளின் செயற்பாடுகளை அவதானித்து மணலின் அளவினை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடலின் மூலம் தீர்hமானிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களினால் அகழ்வு செய்யப்படும் இடங்கள் தொடர்பான கண்காணிப்பை பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலாளர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், குறித்த திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டுமென அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

மணல் ஏற்றிச் செல்லப்படும் அனைத்து வாகணங்களுக்கும் அவ்வப்பிரதேச சபைகளினூடாக வீதி வரி கட்டாயமாக அறவிடப்படவேண்டும் எனவும், அறவிடப்படும் நிதியினைக் கொண்டு சேதமடையும் பாதைகளைத் திருத்துவதற்கு அப்பிரதேச சபைகளினூடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் தற்பொழுது நடைமுறையிலுள்ள சகல அனுமதிப் பத்திரங்களையும் 31.03.2020ம் திகதி முதல் நிறுத்துவது என ஏகமனதான தீர்மானிக்கப்பட்டதுடன் 01.04.2020ம் திகதியிலிருந்து புதிதாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்களால் மூன்று தொடக்கம் நான்கு நாட்களுக்குள் விரைவாக மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வகை;கப்பட வேண்டும் எனவும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. 






SHARE

Author: verified_user

0 Comments: