(ஏ.எச்.கே)
விலைக்குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றை வாங்குவதில் மக்கள் சதொச விற்பனை நிலையங்களில் முண்டியடிப்பு.
ஏறாவூர் நகர கடைத்தெருவில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் விலைக்குறைப்புச் செய்யப்பட்ட பருப்பு, தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் ஆகியற்றை வாங்கிச் சேகரிப்பதில் மக்கள் பெருமளவில் குவிந்ததால் வெள்ளிக்கிழமை 20.03.2020 நண்பகலளவில் அங்கு நீண்ட வரிசை காணப்பட்டது.
அங்கு திரண்ட பெரும் சன நெருசல் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக படையினரும் போக்குவரத்துப் பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறித்ததைத் தொடர்ந்து மக்கள் தமது நாளாந்த உணவுத் தேவைக்கான பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment