20 Mar 2020

களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தை உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பூட்டு.

SHARE
(ஜதுர்சயன்) 

களுவாஞ்சிகுடியில் பொதுச்சந்தை உள்ளிட்ட பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பூட்டு.
இலங்கை மக்களையும் பீடித்துள்ள கொரோனா நோய் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன், நாட்டில் வெள்ளிக்கிழமை (20) மாலை 6 மணயிலிருந்து ஊடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள இந்நிலையில்  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேசம் எங்கும் மக்கள் வெள்ளிக்கிழமை பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

பட்டிருப்புத் தொகுதியில் வர்த்தக கேந்திரமாக விளங்கும் களுவாஞ்சகுடி பொதுச் சந்தை மற்றும் களுவாஞ்சிகுடிடி நகரிலமைந்துள்ள பிரதான வர்த்தக நிலையங்களில் பெரும்பாலானவை வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் திறந்திருந்த ஒருசில வர்த்தக நிலையங்களிலும், வங்கிகளின் தன்னியக்க பணம் பெறும் நிலையங்களிலும் மக்கள் கூட்டத்தையும் அவதானிக்க முடிந்துள்ளது. படுவாங்கரைப் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றனர்.

இது இவ்வாறு இருக்க போக்குவரத்து மார்க்கங்களில் ஈடுபட்டுவரும் போரூந்துகளிலும், பிரயாணிகளின் எண்ணிக்கையையும் காணமுடிகின்றது, இந்நிலையில் வெளியில் செல்லும்போது மக்கள் தமது பாதுகாப்பை உறுத்திப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். 








SHARE

Author: verified_user

0 Comments: