சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் வெள்ளிக்கிழமை எருவில் கிராமத்தில் கண்ணகியம்பாள்ஆலய முன்றலில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.பிரதேசத்தில் சாதனை படைத்த பல பெண்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பெண்களை போற்றத்தக்க பல நிகழ்வுகளும் மக்களை கவரக்கூடியதாக
இருந்தது. மேலும் பாரம்பரிய உணவுவகைகள் தயாரிக்கப்பட்டு அவைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் சிறந்த உணவு தயாரித்தவர்களுக்கு
பரிசுபொருட்களும் வழங்கப்பட்டது.
மேலும் சிறப்பு நிகழ்வாக ‘நாட்டின் வளர்சிக்கு பெண்களின் பங்களிப்பு அவசியம் என்றும் அதனை மறுத்தும் திருவாளர் ஆழிவேந்தன் ரமேஸ்
அவர்களின் தலைமையில் அவசியம் என மலரவன் திரு சு.துசியந்தன் அவர்களும் மாணிக்கம் ஜெயந்தன் திரு மா.புருசோத்மன் அவர்களும்
எதிரணியில் கவிஞர் நவரெத்தினம் திரு ந.கனகரெத்தினம் அவர்களும் கோடையூர் அமிர்தன் திரு எம்.அமிர்தலிங்கம் ஆசிரியர் அவர்களும் கலந்து
கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் கணக்காளர் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment