தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் மட்டக்களப்பு மக்கள் - வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவு வினியோகம்.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவட்டி உள்ளிட்ட பிரதான வர்த்தக மையங்கள் உள்ளிட்ட அனைத்தும் முற்றாகப் பூட்டப்பட்டுள்ள. உள்ளுர், வெளி மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துகளும் மற்றாகத் தடைப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர், சுகாதாரத் துறையினரும், ஊடகவியலாளர்களும் தமது சேவைகளில் ஈடுபட்டுள்ளனர், வீதிகளில் பொலிசாரும். இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையிலீடுகள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, எருவில், ஓந்தாச்சிமடம், களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் வறுமை நிலையிலுள்ள அன்றாடம் கூலி வேலை செய்து தமது குடும்பத்தைப் பாதுகாத்துவரும் 500 குடும்பங்களுககு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தனரம் வினோராஜ் உலர் உணவுப் பொரும்களை புதன்கிழமை (25) வழங்கி வைத்துள்ளார்.
0 Comments:
Post a Comment