வியாழக்கிழமை முடங்குகிறது மட்டக்களப்பு மாவட்டம். தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு.
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் கொரியா, ஈரான் இத்தாலி நாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் மட்டக்களப்பு புணானை கம்பசில் வைத்து 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர் இதில் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறியப்பட்டால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ள இந்நிலையில் இவ்விடையம் தொடர்பில் மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் செவ்வாய்க்கிழமை (10) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்…
அதில் அவர் தெரிவித்துள்தாவது… எமது நாட்டு பிரஜைகள் எவராவது பாதிக்கப்பட்டால் அவர்களை காப்பாற்ற வேண்டிய தார்மிக தேவை எல்லோருக்கும் உள்ளது. அதேவேளை தொற்று வேகமாக பரவி வரும் நாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது. எமது மட்டக்களப்பு மாவட்டம் சகலவளிகளிலும் பின் தள்ளப்பட்ட மாவட்டம் இந்த நிலையில் ஒருவருக்கேனும் நோய் தொற்று ஏற்பட்டால் எமது மட்டக்களப்பு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டுவிடும் இந்த நிலை ஏற்பட்டால் நினைத்துகூட பார்க்க முடிய நிலை மாவட்டத்தில் ஏற்பட்டு விடும் எனவே.
வெளிநாட்டு பிரஜைகளை இங்கு அனுமதிக்க கூடாது என்பதனை வலியுறுத்தி எதிவர்வரும் வியாழக்கிழமை(12.03.2020) மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடக்கப்படும் அன்றைய தினம் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி எமது எதிர்பினை வெளிகாட்டுவதுடன் உலகில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நான் பெற இறைவனை வேண்டி பிராந்திப்போம் என மோகன் தெரிவித்துள்ளார்.
Add caption |
0 Comments:
Post a Comment