இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் சாசனவியல் தொடர்பான ஆறுநாட்கள் கொண்ட பயிலரங்கு.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய நான்கு கல்வி வலயங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமாக, வரலாறு, தமிழ், இந்துநாகரிகம் போன்ற திட்டங்களை உள்ளடக்கியதான பயிலரங்கு நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிராந்திய அலுவலக மண்டபத்தில் நடைபெறும் இப்பயிலரங்கில் கலந்துகொள்வோருக்கு சனிக்கிழமையன்று சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக பெறுப்பு பிராந்திய அலுவலகத்தின் பொறுப்பு அலுவலர் எழில்வாணி பத்மகுமார் தெரிவித்தார்.
இதன்போது யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி.பத்மநாதன், பேராதனை பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் வ.மகேஸ்வரன், தொல்லியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பியதிச சேனாநாயக்க, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்களான கௌரி லக்ஷ்மிகாந்தா, நிலந்தி செந்தூரன் போன்றோர் கலந்துகொண்டு கல்வெட்டுக்கள், சாசனங்கள், பிரமிய எழுத்துக்கள் போன்ற பலவேறு விடயங்கள் பற்றி இந்த பயிலரங்கில் விளக்கமளித்தனர்.
0 Comments:
Post a Comment