8 Mar 2020

ஆரையம்பதி பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது

SHARE
மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (08) பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது அதிதிகளாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ளியு.ஏ.துமிந்த நயனசிறி, மண்முனைப்பற்று தபால் அதிபர் திருமதி வை.லோகேஸ்வரன், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் மாவட்ட இணைப்பு அதிகாரி ரி.சுதாகர், அருவி பெண்கள் வலையமைப்பு உறுப்பினர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழலை சிறப்பாக பேணி ஆரோக்கிய வாழ்வை உண்டுபண்ணும் பொருட்டு மரநடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் பற்றிமாபுரம் தேவாலயம், மாவலிங்கத்துறை பொதுநூலகம், முன்பள்ளி பாடசாலை, கிராம சேவை அலுவலகம் போன்றவற்றில் மரங்கள் நடப்பட்டதுடன், மண்முனை வாவி கரையோரத்தில் மண் அரிப்பை குறைக்கும் கண்டல் தாவரங்களும் நடப்பட்டன.

மகளிர் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு மாவலிங்கத்துறை ஆலயத்திற்கு அருகில்  இடம்பெற்றது. இதன்போது பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் மக்களுக்கு ஆரோக்கிய வாழ்வு மற்றும் காப்புறுதி பற்றிய விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.























SHARE

Author: verified_user

0 Comments: