மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோணாத் தொற்றுக்கு ஆளாக்கப்பட்டோர்களை அனுமதித்து சிகிச்சைக்குட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக கிருமித் தொற்று ஏற்படாத வகையிலான சகல வசதிகளும் கொண்ட தனிமைப் படுத்தப்பட்டு விடுதியினை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ் விசேட ஏற்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விடுதியினை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அராங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா வெள்ளிக்கிழமை (13) நன்பகல் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த வசதிகள் அனைத்தையும் அவதானித்து எதிர்காலத்தில் கொரோணாத் தொற்றினை நாட்டில் ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அவ்வேளை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த கொரோணாத் தொற்றுக்கு ஆனாக்கப்பட்டிருக்காலாம் என்ற சந்தேகத்திற்கிடமான நபரினை வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மணியளவில் அனுமதித்துள்ளனர்.
இத் தொற்று நோய்க்கு ஆளான நபரொருவர் கொழும்பு கட்டட வேலைகளில் சீன நபர்களுடன் பணியாற்றியவர் என்பதும் இந்நபரிற்கு தொற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் தப்பி ஓடிவந்தவர் என்றும் அவரின் விசாரணை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையில் அவரிற்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர் குழாம் முன்வருவதை அவதானிக்க முடிந்தது.
கொரோணாத் தொற்று சந்தேக நபர்களான இம்மாவட்டத்தைச் சேர்ந்த எவராயினும் அடையாளம் காணப்படின் அவர்களுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவிருக்கின்றது. இந்நோயாளிகளை கொண்டு செல்வதற்காக விசேடமான நுழைவாயில் சிறைச்சாலை வீதியில் அமைக்கப்பட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வேளை கொரோணாத் தொற்று நோயாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டாம் என்று ஒரு குழுவினர் வழிமறியலில் ஈடுபட்டு வந்தவர்களை காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்து தடுத்து நிறுத்தியதையும் அவதானிக்க முடிந்தது.
0 Comments:
Post a Comment