10 Mar 2020

இலகுவில் சமூக அமைதின்மை ஏற்படுத்தக் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. சட்டத்தரணியும் கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ்.

SHARE

இலகுவில் சமூக அமைதின்மை ஏற்படுத்தக் கூடிய  மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
சட்டத்தரணியும் கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ்.இலங்கையில் இலகுவில் சமூக அமைதின்மையை ஏற்படுத்தக் கூடிய  மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ள விடயம் கவலையளிப்பதாக சட்டத்தரணியும் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கலாசாரத் திணைக்கள அதிகாரியும் மார்க்க அறிஞருமான அஷ்ஷெ‪ய்க்  பீ.எம்.எம். பிறோஸ் நழீமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee)     பற்றிய அமர்வு செவ்வாய்க்கிழமை 10.03.2020 மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டனர்.

அங்கு “மதங்களைப் புரிந்து கொள்வதன் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில் அவர் தெளிவுரை வழங்கினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சமூகங்களுக்கிடையிலே வன்முறைகள், பிளவுகள்,  அமைதியின்மைக்கு உணர் திறன் உள்ள ஒரு மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது.

அதன் காரணமாகவே சமாதானத்தை விரும்பாத சக்திகள் மட்டக்களப்பிலிருந்தே வன்முறைத் தீயைப் பற்றவைத்து விட்டால் அது வெற்றியளி;க்கும் என்று  நம்புகின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டம்  பல்லின மக்கள் வாழும் பிரதேசமாக இருக்கின்ற அதேவேளை பல சமயங்கள் பல கலாச்;சார விழுமியங்கள் பன் மொழிகள் அங்கே இருக்கின்றன.
இவ்வாறெல்லாம் இருந்தும் இந்தப் பிரதேசத்து மக்களிடையே புரிந்துண்வு இல்லை என்பது ஆய்வுகள் தெரியப்படுத்தும் உண்மையாகும்.

புரிந்துணர்வின்மை காரணமாக பல இழப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். தொடர்ந்தும் சந்தித்து வருகின்றோம். தனிப்பட்ட விவகாரஙகள், முரண்பாடுகள் கூட சமூகப் பிரச்சினையாகவும் இனப்பிரச்சினையாகவும் உருவாக்கப்படுவதை நாம் கண் கூடாகக் கண்டுள்ளோம்.
மட்டக்களப்பில் இனமுறுகலுக்கான இலகுவான வாய்ப்புக்கள் உள்ளதை சமூக விரோதிகளும் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது வருந்தத் தக்க விடயமாகவும் உள்ளது.

எனவே, தனிப்பட்ட முரண்பாடுகளை இன, மத, பிரச்சினையாக உருவகிக்காமல் அவற்றைத் தனிப்பட்ட பிரச்சினைகளாகவே அணுகும் பொழுது இனவாதத் தீயை அணைக்க முடியும்.
அதன் மூலம் பாரிய அழிவுகளையும், தொடர்ச்சியான அமைதியின்மையையும் தடுத்து நிறுத்த முடியும்.

எனவே, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை காரணாக நாம் தொடர்ந்தும் இழப்புக்களைச் சந்திக்கப் போகின்றோமா நமது எதிர்கால இளஞ் சந்திதியினரையும் அமைதின்மைக்குள் விட்டு வைக்கப் போகின்றோமா என்பதையிட்டு அதீத அக்கறை எடுக்க வேண்டும்.

சமூகங்களுக்கிடையே காணப்படும் பல்வேறுபட்ட முரண்பாடுகள் காரணமாக நாம் சந்தித்த இழப்புக்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாகில் நாம் பரஸ்பர புரிந்துணர்வுக்கான வழிவகைகளைக் கண்டாக வேண்டும்.

இதுவிடயத்தில் சமூகப் பொறுப்புடன் மனிதாபிமான மானிடக் கடமையுடன் அர்ப்கணிப்புடன் செயற்பட்டால் அமைதியையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்ளலாம்.
சமூகங்களிடையே வெறுப்பும் சந்தேகக்கண்கொண்ட பார்வையும் இல்லாது போகின்ற சந்தர்ப்பத்தில் நம்மை எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆக்கபூர்வமாக அணுக முடியும்” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: