11 Mar 2020

கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என அறிவதற்கு பணிகள் Batti campus தங்கவைப்பு.

SHARE
கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என அறிவதற்கு பணிகள் Batti campus தங்கவைப்பு.

கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என அறிவதற்கு பதின் நான்கு நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பின் கீழ் உட்படுத்தும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (10) மட்டக்களப்பு Batti campus  இலும் கந்தக் காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனர்வாழ்வு நிலையத்திலும் 181 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை (10) இத்ததாலி, தென் கொரியா போன்ற பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வந்த இலங்கைப் பிரஜைகள் 179 பேரும் தென் கொரியப் பிரஜைகள் இருவருமாக இரண்டு விமானங்களில் செவ்வாய்க் கிழமை அதிகாலை கட்டுநாயக்காவை வந்தடைந்தனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கை நபர்களுக்கு கொரோணாத் தொற்று இல்லை என்பதுடன் மேலும் 14 நாட்கள் தனிமைப் படுத்தி வைப்பதன் மூலம் நோய்த் தொற்றினை உறுதிப் படுத்திக் கொள்வதன் முகமாகவும் நாட்டின் கொரோணா நோய் பரவாமல் நாட்டைக் காக்கும் நோக்குடனே அவ்வாறான முகாம்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்க விமான நிலயத்திலிருந்து ஏழு பஸ்களில் வந்தவர்களில் இரண்டு பஸ்களில் வந்தவர்கள் Batti campus  இல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 29 பேரும் பெண்கள் 09 பேரும் சிறுவர்கள் 03 பேரும் மொத்தம் 41 பேர்களாகும். கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் 5 பஸ்களில் வந்த 140 பேரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் இராணுவ வைத்திய அதிகாரிகளே இவ் மருத்துவ சோதனையில் பங்கெடுத்து வருவதுடன் அவர்களுக்கான உணவு, படுக்கையறை சகல வசதிகளையும் இராணுவமே பொறுப்பேற்று நடத்தி  வருவது குறிப்பிடத் தக்கது.











SHARE

Author: verified_user

0 Comments: