கடந்த மழை வெள்ளத்தில் அசுத்தமடைந்த குடிநீர் கிணறுகள் சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி, மற்றும் வந்தாறுமூலை போன்ற பகுதிகளில் கடந்த வருடம் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தினால் அப்பகுதி மக்களின் குடிநீர் கிணறுகள் அனைத்தும் முற்றாக வெள்ளத்தினால் மூழ்கி அழுக்கடைந்துள்ளன. இந்நிலையில் அவ்வாறான கிணறுகளை இறைத்து சுத்தம் செய்து கொடுக்கும் நடவடிக்கைகளை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்புக்கிளை புதன்கிழமை (19) மேற்கொண்டுள்ளது.
கடந்த வருடம் ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்து கொடுக்குமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எமது கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, நாம் இதனை முன்நெடுத்துள்ளோம். இப்பகுதியில் இவ்வாறு பாதிக்கப்பட்ட சுமார் 700 இற்கு மேற்பட்ட கிணறுகளை இறைத்துச் சுத்தம் செய்து அம்மக்கள் மீண்டும் சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கு நாம் பாதிப்படைந்த கிணறுகளை இறைத்து சுத்தம் செய்து கொடுக்கின்றோம், என இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment