சிறுவயத்தில் திருமணத்தைத் தடுத்தல்.
சிறுவயத்தில் திருமணத்தைத் தடுத்தல் எனும் தொணிப்பொருளின்கீழ் ஜனதக்ஸன் நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் முனைக்காடு கிராமத்தில் நடைபெற்றது.
இதன்போது கதிரவன் கலைக்கழகத்தினால ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவயத்தில் திருமணத்தைத் தடுத்தல் எனும் விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.
எதிர்கால இளைஞர்களின் கற்றல், இழவயது திருமணங்களால் ஏற்படும் சமூக பாதிப்பு, கல்வியின் முக்கியத்துவம், சிறுவயத்தில் குடும்பச்சுமையை ஏற்பதால் ஏற்படும் பாதிப்புக்கள், உள்ளிட்ட பல விடையங்கள் அடங்கலாக இதன்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் ஜனதக்ஸன் நிறுவன அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், கிராமசேவை உத்தியோகஸ்;தர், கிராம பெரியோர்கள், பொலிசார், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தர்.
0 Comments:
Post a Comment