18 Feb 2020

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக்குழுக் கூட்டம் இன்று (18) காலை 9.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.இவ் விவசாயக்குழு கூட்டத்தினை மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.வை.வீ.இக்பாலின் வரவேற்புரையுடன் இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் ஆராயப்பட்டது.

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தொடர்ந்து ஆராய்கையில் இம்முறை நெல் கொள்வனவில் இடம் பெற்ற அசௌகரியங்கள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் தெளிவுபடுத்தியதுடன் எதிர் காலங்களில் அறுவடை செய்யப்படுகின்ற நெற்களை உலர்த்துவதற்கு(காய வைப்பதற்கு )கள வசதியினை ஏற்படுத்தி தருகின்ற சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு நன்மை பெறுகின்ற செயலாக அமைகின்றது எனவும் குறிப்பாக வாகரைப் பிரதேச கட்டுமுறிவுப் பகுதி விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக வழிகளை புணரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைகளுக்கமைவாக விவசாயிகளின் நெற்களை நியாய விலைகளில் விலைத்தாக்கமின்றி கொள்வனவு செய்ய எடுத்த நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயிக                ளுக்கு மகிழ்ச்சியூட்டுகின்ற செயலாக இருந்தமையினை விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் இக் கூட்டத்தில் விழித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் விவசாய குழுக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்(காணி)திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் ஜகனாத், நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஜ்வரன்,வங்கிகளின் முகாமையாளர்கள்,விவசாயத் துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள்,அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: