மட்டக்களப்பு மண்முனை வடக்கில் 52 விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் பா. உ சீ.யோகேஸ்வரன்.வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள 52 விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளையாட்டு உபகரணங்களையும் பொருட்களையும் வழங்கி வைத்தார்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் 520,000 ரூபாய் அவரால் இவ் விளையாட்டு கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட அத்தோடு வீச்சுக்கல்முனை முதியோர் சங்கம் மற்றும் சில அமைப்புக்களுக்கும் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment