5 Jan 2020

நீதிபதி வரவேண்டும் விசாரணை நடத்த மட்டக்களப்பு சிறைச்சாலைக் கூரைமேலேறி கைதிகள் போராட்டம் காய்ச்சல் பீடித்த கைதி உயிரிழப்பு.

SHARE
நீதிபதி வரவேண்டும் விசாரணை நடத்த மட்டக்களப்பு சிறைச்சாலைக் கூரைமேலேறி கைதிகள் போராட்டம்  காய்ச்சல் பீடித்த கைதி உயிரிழப்பு.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சிறைக் கைதி தொடர்பாக நீதிபதி நேரடியாக வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரி சிறைக் கைதிகளில் சிலர் ஞாயிற்றுக்கிழமை (05.01.2020) சிறைச்சாலைக் கூரைமேலேறி போராட்;டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சிறைச்சாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்ததோடு படையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சுமார்  12 பேருக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் கூரைமேலேறி இந்த போராட்டத்தில் குதித்தனர்.

சிறைச்சாலையில் இருந்த கைதியொருவர் ஞாயிற்றுக்கிழமை காலை மரணமானதை அடுத்து அந்தக் கைதியின் மரணம் தொடர்பாக நீதிபதி நேரடியாக சிறைச்சாலைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சாய்ச்சல் காரணமாக சிறைச்சாலையில் சிகிச்சை பெற்றுவந்த கைதியொருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்திலேயேய சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அந்த  சிறைக்கைதியின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாலேயே தாங்கள் போராட்டத்தில் குதித்துள்ளதாக போராட்டக் காரர்களான சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி சிறைச்சாலைக்கு வராவிட்டால் தாங்கள் கழுத்தினை அறுத்து தற்கொலை செய்யப்போவதாகவும் கூரையில் இருந்து குதிக்கப்போவதாகவும் போராட்டக் காரர்களான சிறைக் கைதிகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.



SHARE

Author: verified_user

0 Comments: