மட்டு கொத்துக்குளத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புதுவருட விசேட வழிபாடு.
மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு புதன்கிழமை (01.01.2020) விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றுத.
ஆலய பிரதம குரு சிவசி ஸ்ரீ ராஜ் ஸ்ரீ மியோத்பவக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டடில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் கலந்துகொண்டிருந்ததுடன், ஆலய இராஜகோபுர கட்டுமானத்திற்கு 10 இலச்சம் ரூபா நிதியையும் அவர் அன்பளிப்பு செய்தார். இதனையடுத்து அவரை ஆலய நிர்வாக சபையினர் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக அவருக்கு பொன்னாடை பேர்த்தி கௌரவித்து நினைவுச் சான்றுதல் வழங்கிவைத்தனர்.
இதேவேளை புதுவருடத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள இந்து ஆலங்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலங்களில் விசேட பூஜை வழிபாடுகள் ஆராதனைகள் இம்பெற்றது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment