மட்டக்களப்பை எவ்வாறு அபிவிருத்தி செய்து தருகின்றோம் என்பதை மக்கள் எமது செயலின் மூலம் பார்க்கலாம் - சந்திரகுமார்.
மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மட்டக்களப்பை எவ்வாறு அபிவிருத்தி செய்து தருகின்றோம் என்பதை மக்கள் எமது செயலின் மூலம் பார்க்கலாம்.
இதுவரைகாலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கி வந்த மக்கள் தற்போது எமது ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பின்னால் அணிதிரண்டு வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (20) மட்டக்களப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்ற 50 இற்கு மேற்பட்டடோர் தமது அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்போது அங்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…
நான் அரசியலுக்காக வந்தவன் அல்ல சந்தர்ப்ப சூழ்நிலையால் அரசியலுக்கள் தள்ளப்பட்டுள்ளேன். எனக்குக் கிடைத்திருக்கின்ற இச்சந்தர்ப்பத்தை எமது மக்கள் நன்கு பயன்படுத்தி நமது பிரதேசங்களை நன்கு அபிவிருத்தி செய்ய முன்வரவேண்டும். இந்த வகையில்தான் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தற்போது எமது செயற்பாடுகளைக் கண்டு எம்முடன் கைகோர்து வருகின்றார்கள். எமது மக்கள் எவ்வளவிற்கு இவ்வாறு எம்முடன் இணைகின்றார்களோ அவ்வளவிற்கு அபிவிருத்தியையும் நாம் முன்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்வருகின்ற 20 வருடங்களுககு எமது ஆட்சியை யாராலும் மாற்ற முடியாது. இச்சந்தர்ப்பத்தை நாம் சிறந்த முறையில பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 75 வீதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற நாங்கள் யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டியத்தில்லை. இதுவரைகாலமும் தேசியம் பேசிப்பேசி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு எதையும் செய்து சாதிக்கவில்லை.
எமது அரசாங்கத்தினால் இலங்கை மக்களுக்கு என்ன வரப்பிரசாதங்கள் கிடைக்கின்றதோ அவை அனைத்தையும் நான் இம்மாவட்டத்திற்குக் கொண்டு சேர்ப்பேன் அதுதான் எனது கடமையுமாகும். மாறாக இதனை தனிப்பட்டிமுறையில் வேறு யாரும் கொண்டு வந்து தருகின்றோம் என உரிமைகோரமுடியாது. அவ்வாறு அவர்களால் தனிப்பட்ட வித்தில் கொண்டுவரவும் முடியாது.
எனவே மக்கள் எமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் மட்டக்களப்பை எவ்வாறு அபிவிருத்தி செய்து தருகின்றோம் என்பதை மக்கள் எமது செயலின் மூலம் பார்க்கலாம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment