5 Jan 2020

மட்டக்களப்பு மாநகர சபையினால் கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதி புனரமைப்பு

SHARE
மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி ஜெயந்தி வீதி மற்றும் அதனோடு இணைந்த குறுக்கு வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் சனிக்கிழமை (04.01.2020) ஆரம்பித்து வைக்கப்பட்டன. 
கருவேப்பங்கேணி வட்டார உறுப்பினர் வே.தவராஜா விடுத்த வேண்டு கோளிற்கிணங்க மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் சிபார்சின் ஊடாக கடந்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 5 மில்லியன் ரூபாய்களைக் கொண்டு மேற்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


மட்டக்களப்பு மாநகர சபையினால் நேரடியாக மேற்கொள்ளப்படும் இவ்வீதியானது 370 மீற்றர் நீளம் வரை கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


குறித்த வீதிகளின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்களான வே.தவராஜா, த.இராஜேந்திரன், து.மதன் மற்றும் கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.


மத்திய அரசாங்கத்தின் வாயிலாக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக  நடைபெறும் இவ்வேலைத்திட்டம் 320 மீற்றர் கொங்கிரீட்  இடுவதற்கே அங்கீகரிக்கப்பட்டது. இருந்தும் குறித்த வீதிகள் முழுமையாக நிறைவுறுத்த படவேண்டியிருந்தமையால், மாநகர சபையின் மேலதிக நிதி அனுசரணையுடன் முழுமையாக புனரமைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: