காட்டு யானை தாக்கி வயல் காவலாளியான முதியவர் பலி.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள காரைக்காடு கணங்குளமடு எனுமிடத்தில் காட்டு யானை தாக்கியதில் வயல் காவலாளியான முதியவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 07.01.2020 பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வந்தாறுமூலையைச் சேர்ந்த பூபாலப்பிள்ளை குமாரசாமி (வயது 74) என்பவரே பலியாகியுள்ளாத உறவினர்கள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, வழமைபோன்று இந்த முதியவர் நெல் வயல் காவலுக்கு நின்றிருந்தபோது காட்டுப் பக்கமிருந்து திடீரென வயல்பக்கம் பிரவேசித்த காட்டு யானை இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
சடலத்தை மீட்கும் நடவடிக்கையிலும் சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளிலும் தாம ஈடுபட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment