கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சிலர் தற்போது எமது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இன விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா. சந்திரகுமார் தெரிவித்தார்.
தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் வியபாரிகளைத் தடுக்கும் அநீதியை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா. சந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சில அமைப்புக்கள் முஸ்லிம் வியாபாரிகள் தமிழ் பிரதேசங்களில் வியாபாரம் செய்ய முடியாது என்று கூறி வருகின்றனர். அதற்கும் பொதுஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சந்திரகுமார் தெரியப்படுத்தினார்.
இந்த விடயம் தொடர்பாக வியாழக்கிழமை 02.01.2020 ஊடகங்கசளுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட சிலர் தற்போது எமது ஜனாதிபதிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு இன விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி காலத்தில் மௌனமாக இருந்துவிட்டு தற்போது முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக செயற்படுகின்றனர். இதற்கும் எமது பொது ஜன பெரமுன கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எமது ஜனாதிபதியும் பிரதமரும் சிறுபான்மை மக்கள் அனைவரும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
மட்டக்களப்பில் முஸ்லிம் வியாபாரிகள் அச்சமின்றி எங்கும் சென்று வியாபாரம் செய்யலாம் அதனை யாரும் தடுத்தால் என்னிடம் முறையிடுங்கள் நான் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன்.” என்றார்.
0 Comments:
Post a Comment